மீட்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்: அதாவுல்லா
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என பெருந்தெருக்கள் அமைச்சர் அத்தாவுல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் மக்களும் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், தமது உறவினர்களின் இல்லங்களிலும் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வடக்கில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான அனைத்து உடமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கு விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லையெனக் குறிப்பிட்ட அதாவுல்லா, அதன் பலாபலன்களை அவர்கள் இப்போது அனுபவிப்பதாகக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply