மாற்றத்துக்கான இளைஞர் இயக்கம்
இந்த நாட்டின் இளந்தலைமுறையினரின் இழந்து போன உரிமைகளை வென்றெடுப்பதற்கான இளைஞர் போராட்டத்தை நடத்தவென ‘மாற்றத்துக்கான இளைஞர்கள் ‘ என்ற பெயரில் தமக்கென ஒரு இளைஞர் இயக்கத்தை தொடங்கவுள்ளதாக ஜேவிபியிலிருந்து பிரிந்த அதிருப்தியாளர் குழு அறிவித்துள்ளது.
‘உரிமைகளை இழந்து நிற்கும் தலைமுறை என இன்றைய இலங்கையின் இளந்தலைமுறையினர் கருதப்படுகின்றனர். இதற்கு முடிவுகட்டுவதே எமது நோக்கம்’ என ‘ மாற்றத்துக்கான இளைஞர்’ இயக்கத்தின் ஏற்பாட்டாளரான வருண தீப்த ராஜபக்ஷ செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
சுற்றாடல், மனித உரிமைகள், கலைகள், விளையாட்டு ஆகிய துறைகளில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும். அத்துடன் நவ தாராள பொருளாதார, முறைக்கு எதிரான போராட்டத்தையும் இந்த இயக்கம் நடத்தும்.
‘வேலையின்மை, இளைஞர்கள் தற்கொலை புரிதல் என்னும் பிரச்சினைகளுக்கு எதிராகவும் இந்த இயக்கம் போராடும்’ என அவர் கூறினார்.
நாள் ஒன்றில் பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை புரிகின்றனர். கடந்த 15 வருடங்களில் 83,000 இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். 70 சதவீதமான இளைஞர்கள் தமது பெற்றோரில் தங்கியுள்ளனர் என ராஜபக்ஷ கூறினார்.
இந்த இயக்கத்தை தொடக்குமுகமாக எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பு ஹைட்பாக்கிலிருந்து புதிய நகரசபை மண்டபம்வரை பேரணியொன்று இடம்பெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply