மின்சார வசயில்லாத வன்னி பாடசாலைகள்; விடுதி வசதியின்மையால் வகுப்பறையில் படுத்துறங்கும் ஆசிரியர்கள்

வன்னி விளாங்குளம் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் விடுதி வசதி , மின்சார வசதி இல்லாததினால் தூரத்திலிருந்து வரும் ஆசியர்கள் வகுப்பறையில் படுத்துறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கணினிக் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 10 கணினிகளும் இயங்க முடியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலைப்பாடு குறித்து கவலையும் விசனம் தெரிவித்துள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச்சமூகம் ஆகியோர் பாடசாலையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேத்தில் வன்னி விளாங்குளம் என்னும் இடத்திலுள்ள அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து 11 வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

இங்கு கல்வி கற்கும் ஆசியர்கள் வவுனியா , யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து வந்து கல்வி கற்பித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் வகுப்பு முடிந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறார்கள். வசதியில்லாதவர்கள் பாடசாலையில் தங்கிவிடுகிறார்கள். பாடசாலையில் தங்கும் இவர்களுக்கு விடுதி வசதிகள் இல்லாததினால் வசதியீனங்கள் மத்தியில் வகுப்பறைகளில் படுத்துறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்டுகிறார்கள்.

இதே வேளை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்படாததினால் கணினிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் ஜெனறேற்றரின் உதவியுடன் கணினியை இயக்க முற்பட்ட போதிலும் மாணவர்களுக்கு திருப்திகரமான முறையில் கணினிக் கல்வியைக் கற்பிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இதனால் 10 கணினிகளும் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன.

மாந்தை கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பல இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்ட போதிலும் வன்னி விளாங்குளத்திற்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படாததினால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குறிப்பாக மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையம் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் ஆலயம் உட்பட பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இது குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பல தடவை தெரிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைத் தீர்ப்தற்கு இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதது குறித்து இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply