தமிழகத்தில் இருந்து நாடு திரும்புவர்களுக்கு இலவசமாக கடவுச்சீ்ட்டு
தமிழ் நாட்டில் நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு இலவசமாக கடவுச்சீ்ட்டுக்களை விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு முகாம்களிலும், தனியாக வீடுகளிலும் சுமார் 90 ஆயிரம் இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்.
நாடு திரும்புவதற்கான இந்த சலுகை வழங்கப்படாத பட்சத்தில் கடவுச்சீட்டுக்காக 4,400 ரூபா கட்டணம் செலுத்த நேரிடுவதாக திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply