வன்னிக்கு தொடர்ந்தும் நிவாரணப் பொருள்கள்: உலக உணவுத் திட்டம்

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உலக உணவுத் திட்டத்தின் 2009ஆம் ஆண்டுக்கான முதலாவது உணவுத் தொகுதி வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
 
811 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு 57 லொறிகள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சென்றடைந்திருப்பதாக உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வன்னிக்குத் தொடர்ச்சியாக உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது 10வது உணவுப் பொருள் தொகுதி அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் 230,000 பேருக்குமான அத்தியாவசிய உணவுப் பொருள்களை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, உலக உணவுத் திட்டம் வழங்கி வருகிறது. இதுவரை 6,617 மெற்றிக் தொன் உணவுப் பொருள்கள் வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், மேலதிகமாக தாம் 781 மெற்றிக்தொன் அரிசியை இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பகிர்ந்தளித்திருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், பாடசாலைச் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்காக உலக உணவுத் திட்டம் 1.1 மில்லியன் பெறுமதியான உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply