பாடசாலையில் படையினர் முகாம்; மாணவர்களின் கல்வி பாதிப்பு

பாடசாலைக் கட்டடத்தில் படையினர் முகாமிட்டுள்ளதால் அந்தப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வேறு பாடசாலைகளுக்குச் சென்று வருவதாக வருத்தம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தைச் சேர்ந்த கருநாட்டுக் கேணி அரசு தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களே இவ்வாறு அலைந்து திரிகின்றனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சென்ற ஆண்டு மீளக்குடியமர்ந்துள்ளனர். ஆனால் பாடசாலைக் கட்டடத்தில் படையினர் முகாமிட்டுள்ளதால் அதனை மீளவும் ஆரம்பிக்க முடியவில்லை. இதனால் இந்தப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் வேறு பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதலாம் தவணையிலிருந்து பாடசாலை இயங்கத் தொடங்குமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அனால் படையினர் இன்னும் வெளியேறாததால் அது தொடர்ந்தும் தனது கல்விச் செயற்பாட்டை ஆரம்பிக்கவில்லை.

மாணவர்களின் அவல நிலையை கருத்திற் கொண்டு இந்தப் பாடசாலையை மீளவும் ஆரம்பிக்கவேண்டுமெனப் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஆண்டாள் குளம் அ.த.க. பாடசாலை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையின் சேதமடைந்த கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் பாடசாலை திறக்கப்படவுள்ளதாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர் கோ.வரதராஜமூர்த்தி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply