காணாமல் போன, தடுத்து வைக்கப்பட்ட உறவுகள் குறித்து பதியுங்கள்
வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தமது காணாமல் போன உறவுகள், கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பதிவுகளை மேற்கொள்ள வரும்போது சரியான விபரங்களையும் புகைப்படங்களையும் தங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இலகுவாக இருக்குமெனவும் அவர் கூறினார்.
காணாமல் போனோர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலிலுள்ளவர்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், பொதுமக்கள் தங்களது குடும்பங்களில் காணாமல் போனோர் மற்றும் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அந்தந்த மாவட்டங்களிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களூடாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply