கிராமத்துக்கு இளைஞர்களை தேடிவருகின்ற கல்வி வாய்ப்புக்களை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்: சிறிரெலோ தலைவர் உதயராசா

கிராமத்துக்கு இளைஞர்களை தேடிவருகின்ற கல்வி வாய்ப்புக்களை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமென்று சிறிரெலோ கட்சியின் தலைவர் ப. உதயராசா வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலைய கட்டட திறப்பு விழா வவுனியா கற்பகபுரத்தில் இடம்பெற்றபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது;

கடந்த காலங்களில் போலல்லாது தற்போது கிராமங்களில் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படுவது பயிலுநர்களுக்கு ஏற்படக்கூடிய அசெளகரியங்களை பெருமளவு குறைத்து விடுகிறது. நாம் தொழில் நுட்ப முன்னேற்றத்துடன் போட்டி போடும் நிலையில் உள்ளோம்.

இந்நிலையில் இப்பயிற்சி நெறிகளை பயிலுவதன் மூலம் இளைஞர்கள் தங்கள் குடும்ப பொருளாதார சுமைகளை தாங்கக்கூடிய வல்லமையை பெறக்கூடியவர்களாக மாறுகின்றனர்.

எனவே, காலத்தை வீண்விரயம் செய்யாது பயனுள்ளதாக மாற்றுவதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் என்பதுடன் ஒவ்வொரு பெற்றோரும் பள்ளிக் காலத்தில் மட்டு மின்றி பிள்ளைகளின் இளமைக் காலத்திலும் கண்காணிப்புடனும் கரிசனையுடனும் நடந்து கொள்வதன் மூலம் வளமான எதிர்கால சமூகத்தை தோற்றுவிக்க முடியும் என்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வவுனியா பிரதே செயலாளர் சிவபாலசுந்தரம் கருத்து தெரிவிக்கையில் பிள்ளைகள் மீது பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும் அவர்கள் எங்கு செல்கின்றார்கள் என்ன செய்கிறார்கள் என்பவை தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம். இவ்வாறான அக்கறை இன்மையாலேயே பிள்ளைகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படுகின்றது எனவே இவ் விடயம் குறித்து பெற்றோர் கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலாளர் சிவபாலசுந்தரம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மாவட்ட உதவிப்பணிப்பாளர் மீள்எழுச்சி திட்ட உதவிப் பணிப்பாளர், கிரம சேவையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=10_01_2012_005_007&mode=1

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply