பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக்கூடாது
பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை அரசியல் தலைவர்கள் ஊக்குவிக்கக்கூடாது என அஸ்கிரிய பீடாதிபதி அதி.வண. உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் கூறியுள்ளர்.
‘பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதற்கு நான் எதிரானவன் அல்ல. அப்படிச் செய்ய வேண்டாம் என நாம் அவர்களை கோர முடியாது. அதைவிட பிக்குகள் அரசியலுக்கு வருவதை அரசியல் தலைவர்கள் அதைரியப்படுத்தலாம்’ என அவர் கூறினார்.
அஸ்கிரிய பீடாதிபதியை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றுமுன்தினம் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளின் அவமதிப்புகள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் அனைவரும் நாட்டுக்காக செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply