சஜித் , தயாசிரி இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்
ஐக்கிய தேசியக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குருணாகலை மாவட்ட எம்.பி தயாசிரி ஜயசேகர ஆகியோருக்கு கட்சி தடை விதித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பான இறுதி முடிவு நாளை எடுக்கப்படும். ஐ.தே.க கட்சியின் செயற்குழு நாளை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெறவுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு அதில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் கட்சியில் இருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஐ.தே.கட்சியின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச, தயாசிரி ஜயசேகர எம்.பி.க்கள் சில வருடங்களாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதாகவும் பிரதேச மட்டத்தில் கட்சிக் கூட்டங்களை நடத்தி கட்சி ஆதரவாளர்களைத் திசை திருப்புவதாகவும் பல குறைபாடுகள் கட்சித் தலைமைக்குக் கிடைத்துள்ளதாகவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி இருவரையும் நல்வழிப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்குப் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply