விட்டுக்கொடுப்புடன் செயற்பட இலங்கை – இந்தியா இணக்கம்

மீன்பிடித் துறையில் பரஸ்பர நல்லுறவை பேணிப் பாதுகாப்பதற்காக விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயற்படுவதற்கு இலங்கையும், இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இரு நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டத்தின் போது இரு நாடுகளும் தங்கள் பலத்தை காண்பித்து பிரச் சினைகளை தீர்ப்பதற்கு பதில் கடற்றொழிலில் ஈடுபடும் இரு தேச மக்களையும் மனிதாபிமான முறையில் நடத்துவது அவசியம் என்றும், இதற்கு ஏற்புடைய வகையில் இரு நாடுகளும் நடந்து கொள்ள வேண்டுமென்ற இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

இம்மாதம் 13ம்,14ம் திகதிகளில் இலங்கையில் நடைபெற்ற நாலாவது இலங்கை – இந்திய கடற்றொழில் தொடர்பான கூட்டு குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட இலங்கை தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகா செனவிரத்னவும் இந்திய தூதுக்குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ஹர்ஷா வர்தன் சிறின்லாவும் தலைமை தாங்கினார்கள்.

2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை – இந்திய கடல் எல்லையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தி ருக்கிறதென்றும் இரு தேசங்களும் தத்தமது நாடுகளின் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் உத்தர வாதம் வழங்கப்பட வேண்டுமென்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய கரையோரப் பகுதிகளில் வாழும் கடற்றொழிலாளர்களின் சமூகப் பொருளாதார, வாழ்வாதாரத்திற்கு உதவக்கூடிய வகையில் இருநாடுகளும் தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென்றும் இரு நாடுகளும் கடற்றொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி நியாயபூர்வமான முறையில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் தெரியாத்தனமாக மறுநாட்டின் சர்வதேச கடல் எல்லையை சென்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதனால், அவர்களை கூடிய விரைவில் விடுவிப்பது பற்றியும் இந்த கூட்டத் தொடரில் ஆராயப்பட்டது. கடற்றொழில் பற்றி அபிவிருத்தி செய்வதான நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக கையாள்வதற்கும் கடற்றொழில் முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறை குறித்து விஞ்ஞானிகளின் ஆலோசனைகளை இரு தேசங்களுக்கும் அறிவுறுத்துவதற்கும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.

பாக்கு நீரிணையில் சூறாவளி காலநிலை நிலவிய போது இந்திய கடற்றொழி லாளர்களை காப்பாற்றியமைக்காக இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply