பேச்சுக்கள் சரியான பாதையில் செல்ல இந்தியாவின் அழுத்தம் அவசியம்

பேச்சு வார்த்தை சரியான பாதையில் செல்ல வேண்டுமாயின் இந்தியாவின் அழுத்தம் அவசியம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளனர்.மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்துள்ளனர். இப்பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஆரம்பிக்கபட்ட இந்த பேச்சு வார்த்தை சரியான பாதையில் செல்லவில்லை. அந்த வகையில் இந்தியா இந்த பேச்சுவார்த்தையில் தலையிட்டு சரியான பாதையில் கொண்டுசெல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறில்லையெனின் இந்த பேச்சு வார்த்தையை தொடரமுடியாத நிலை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சர் கிருஷ்ணாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி பேச்சு வார்த்தையில் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம் பெற்ற தொடர் பேச்சு வார்த்தைகள் தொடர்பிலே கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply