இலங்கையுடனான உறவுகளில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது

இலங்கையுடனான உறவுகளில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது எனநோர்வே அறிவித்துள்ளது. இலங்கையுடன் பல தசாப்தங்களாக உறவுகள் நீடித்து வருவதாக நோர்வே தூதுவர் ஹில்டா ஹாரால்ஸ்டாட் தெரிவித்துள்ளார் . ஒரு தொகுதி மக்களின் அடிப்படையில் மட்டுமே நோர்வேயின் வெளியுறவுக்கொள்கை அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்ற யதார்த்தமான நோக்கத்துடன்நோர்வே செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பட்டியல் எதுவும் நோர்வேயில்கிடையாது என்ற போதிலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் இல்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியான முறையில் நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை எட்டுதல்மற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகியன, சம்பந்தப்பட்ட தரப்பினரையே சாரும் என அவர்தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை நோர்வே அனுமதிக்கவில்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 22ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் பாரிய மாற்றத்தைஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரவேற்கப்படவேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்தீர்வுத் திட்டம், அதிகாரப் பகிர்வு, நல்லிணக்கம்,மனித உரிமைகளை மேம்படுத்தல், சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறுமுக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநயாக வழிமுறைகளில் இலங்இயின் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்வழங்குமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு பல தடவைகள் நோர்வே வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத வரையில் உலகில் நிலையானசமாதானத்தையும், ஜனநாயகத்தையும் எட்ட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply