13வது திருத்தத்திற்கும் மேலதிகமாக தீர்வை வழங்க அரசு தயார்

இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு 13ம் திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னிடம் இன்று உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் அறிக்கையை இந்தியா வரவேற்கிற தென்றும் அவற்றை இலங்கை அரசாங்கம் காலதாமதப்படுத்தாமல் நடைமுறைப் படுத்த வேண்டுமென்பதே இந்தியா வின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படு த்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவும் பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்க தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி ஒரு நல்ல பண்பாளர் என்பதை நேற்று நடந்த ஒரு சம்பவம் மூலம் நான் புரிந்துகொண்டேன் என்று தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், நேற்று காலையில் அலரி மாளிகையில் பொங்கல் விழா நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த போதிலும் தான் மாலையில் தான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் அந்த விழாவை நானும் கலந்து கொள்வதற்கு வகை செய்வதற்காக மாலை வரையில் ஒத்திவைத்தார் என்றும், இதனால் நான் மனம்நெகிழ்ந்து ஜனாதிபதியை பாராட்டினேன் என்றும் கூறினார்.

மீனவர் பிரச்சினை பற்றி பிரஸ்தாபித்த இந்திய அமைச்சர், மீனவர்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்து இலங்கை, இந்திய தரப்பினர் இரு சாராரும் அவர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டுமென்றும், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை, இந்திய கடற்றொழில் பற்றிய கூட்டத்தொடரில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது குறித்து மனமகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மேலும் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கையும், இந்தியாவும் வரலாற்று காலம் முதல் ஆரம்பகால நாகரீக யுகத்தில் இருந்து நட்புறவுடன் இருந்து வரும் இரண்டு நெருங்கிய நாடுகளாக விளங்குகின்றன.

எனவே, எங்கள் நாடுகளுக்கிடையில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை நாம் எங்களுக்கிடையி லான நட்புறவுக்கு முக்கியத்துவமளித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலம் தீர்த்து வைக்கமுடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.

கிருஷ்ணாவும் எமது வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¥ம் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போது ஒரே விதமான இந்தக் கருத்தை வலியுறுத்தினர்.

பத்திரிகையாளர் மாநாட்டின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக ஒரு காலக்கெடு இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இதுபோன்ற உணர்வுபூர்வமான அரசியல் தீர்வுகளை தீர்த்து வைப்பதற்கு காலக்கெடு விதிப்பது கடினமான விடயமென்று கூறினார்.

நாம் இந்த விடயம் தொடர்பாக சகல தரப்பினருடனும் மனம் விட்டு பேச வேண்டும். அந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, நாம் சில யோசனைகளை முன்வைத்து, உரையாடுவதன் மூலம் ஒரு நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு உதவ முடியுமென்பதில் நாம் அசையாத நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று கூறினார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவே இனப்பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவை காணக்கூடிய ஒரு சிறந்த மேடையாக விளங்குகிறது. எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் உறுப்பினர்களின் பெயரை முன்மொழிய வேண்டும்.

இதன் மூலமே எங்கள் நாட்டின் நீண்டகாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்று பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

இந்தியா இலங்கையின் ஒரு நெருக்க மான நட்பு நாடு. கடந்த காலத்தில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்தியா எங்களுக்கு உதவி செய்திருக்கின்றது. இந்த நட்புறவை எதிர்காலத்திலும் பாதுகாத்து நீடிக்க முடியுமென்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இலங்கை இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவிய லாளர் முன் உரையாடுகையில் கூறினார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யிலான நட்பு பாலத்தை மேலும் வலுவூட்டுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் இந்த விஜயம் தொடர்பாக ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது.

49ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ¥ம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் கைச்சத்திட்டனர். விவசாய துறை அபிவிருத்தி செய்வதற்காக இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விவசாய +(தின்சின் செயலாளர் டபிள்யூ. சகல சூரியவும் இங்குள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவும் கைச்சாத்திட்டனர்.

மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்டவும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜே. எஸ். சர்மாவும் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

வடபகுதியின் இரயில் சேவையை மீளமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 382.37 மில்லியன் டொலர் கடனுதவிக்கான நான்காவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எமது திறைசேரி செயலாளர் டாக்டர் பி. பீ. ஜெயசுந்தரவும், இந்திய எக்ஸிம் வங்கியின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரி. சி. ஏ. ரங்கநாயகமும் கைச்சாத்திட்டனர்.

ஐந்தாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தம்புள்ள நீர்விநியோக திட்டத்திற்கு இந்தியாவின் தேசிய ஏற்றுமதி காப்புறுதி திட்டத்தின் கீழ் 60.69 மில்லியன் டொலர் கடனுதவி கொடுக்கப்படும். இதில் டாக்டர் பீ. பி. ஜெயசுந்தரவும், திரு. ரி. சி. ஏ. ரங்கநாதனும் கைச்சாத்திட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply