13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாண அரசாங்கம் இணங்கியமை வரவேற்கத்தக்கது: சிறிரெலோ தலைவர் உதயராசா
இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாணத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இத்தகைய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று சிறிரெலோ அமைப்பின் தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
கடந்த மூன்று தசாப்தங்களாக அழிவுகளையே சந்தித்து வந்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டியது இன்றியமையாதது.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த ஒரு வருட காலமாக இடம் பெற்றுவரும் பேச்வார்த்தைகள் இணக்கப்பாடு எதனையும் எட்ட வில்லை. இதனால் பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்ர் எஸ். எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷøவ நேற்று சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள கருத்தானது ஒரு சிறுதுளி நம்பிக்கையினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக இந்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, முதற்கட்டமாக இத்தகைய தீர்வினையாவது வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும். இதற்கு இந்திய அரசாங்கம் மேலும் அழுத்தங்களை வழங்க வேண்டியது அவசியமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுகள் தொடர்ந்தும் இடம் பெறுவதற்கும் அரசாங்கம் உரிய தீர்வினை வழங்குவதற்குமான பரிபூரண ஒத்துழைப்பினை இந்தியா வழங்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=18_01_2012_002_004&mode=1
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply