இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் நீதித்துறை ஒத்துழைப்பு உடன்படிக்கை அவசியம் : ஹக்கீம்

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீதித்துறை தொடர்பிலான ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றின் அவசியம் பற்றி நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா இலாஹி பலோச்சிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீலா இலாஹி பலோச் அமைச்சர் ரவூப் ஹக்கீமை நீதியமைச்சில் செவ்வாய்க்கிழமை சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் காலப்பகுதியில் நாட்டில் பரவலாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அமைச்சர் ஹக்கீம் உயர்ஸ்தானிகரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இங்கு நீதிச் சீர்திருத்தம் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீதித்துறை ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்று இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதை அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்களின் பரிணாமத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் தீர்மானிக்குமென தமது கட்சி நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply