பொருளாதார நிலையங்களில் சிலர் கப்பம் பெறுவதாக தகவல்

பொருளாதார மத்திய நிலையங்களில் சிலர் கப்பம் பெறுவது தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் ஆராயுமாறும் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கேள்வியொன்றை எழுப்பிய சந்தர்ப்பத்தில் சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சில பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படுகின்றமை மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கப்பம் பெறப்படும் சம்பவங்கள் தொடர்பில் புத்திக்க பத்திரண கேள்வி
எழுப்பியிருந்தார்.

எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் கப்பம் பெறும் சம்பவங்கள் ஏதும்
இடம்பெறவில்லை என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அதற்கு பதிலளித்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply