கூட்டமைப்புடனான பேச்சுக்கள் இடைநிறுத்தப்படவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்படவோ அல்லது வாபஸ் செய்யப்படவோ இல்லை அரசாங்கம் அறிவித்துள்ளது.சகல தரப்பினருடனும் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமேதேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை எட்ட முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்திக் கொண்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்க வேண்டுமென ஆளும் கூட்டமைப்பைச் சேர்ந்த சில கட்சிகள் கோரி வருவதாகக்குறிப்பிட்டுள்ளார்.

பல கட்சிகளின் கூட்டணியாக ஆட்சி நடத்தி வரும் அரசாங்கம் ஏனையகட்சிகளின் கருத்துக்களுக்கு செவி மடுப்பதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் முரண்பாடுகள் காணப்படுவதாகக்குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த முரண்பாடுகளை களைவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்தகருவியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தெற்கு மற்றும் வடக்கு மக்களை திருப்தி படுத்தக் கூடிய வகையிலானதீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பினைப் பொருத்தமட்டில் மிகவும் சவால் மிக்க காரியமல்ல என அவர்தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்படவோ அல்லது வாபஸ்பெற்றுக்கொள்ளப்படவோ இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply