இந்தியக் கடற்படைக்கு ரஷிய அணுசக்தி நீர்மூழ்கி

இந்திய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை ரஷியா அளித்துள்ளது.

மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிரிமோர்யே துறைமுகத்தில் இதற்கான விழா நடைபெற்றது. அதில் ரஷியாவுக்கான இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ராவுடன், ரஷியாவின் யுனைடெட் கப்பல் கட்டும் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் நேர்பாவை நிறுவனத் தலைவர் ரோமன் டிரோட்ùஸன்கோ, இந்திய தூதரிடம் ஒப்படைத்தார். மொத்தம் 12,770 டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் மணிக்கு 30 நாட் வேகத்தில் செல்லக் கூடியது. இதில் 533 மி.மீ. அளவுள்ள டார்பிடோ மற்றும் நான்கு 650 மி.மீ. டார்பிடோக்கள் உள்ளன.

இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஐஎன்எஸ் சக்ரா என பெயரிடப்பட்டுள்ளது. இது 10 ஆண்டு குத்தகை அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 90 கோடி அமெரிக்க டாலரை இந்தியா அளிக்கும்.
இதைத் தொடர்ந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் வைத்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

ஏற்கெனவே அமெக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வரிசையில் 6-வது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

1980-களில் இந்திய கடற்படை, ரஷிய ராணுவத்தின் சார்லி கிளாஸ் அணுசக்தி நீர்மூழ்கியைப் பயன்படுத்தி வந்தது. இப்போது வழங்கப்பட்டுள்ள நேர்பா அணுவிசை நீர்மூழ்கியில் நீண்ட தொலைவு சென்று தாக்கும் அணுசக்தி ஏவுகணைகள் அல்லது வழக்கமான ஏவுகணைகள் உள்ளனவா என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

2008-ம் ஆண்டு நேர்பா அணுவிசை நீர்மூழ்கியில் தீப்பிடித்ததில் 20 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். கடற்படை ஒத்திகையின்போது இந்த விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் விஷவாயு வெளியேறியதில் கடற்படை வீரர்கள் இறந்ததால், இப்போது வாயு தடுப்பு கருவிகள் நேர்பா அணுவிசை நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டு இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply