துரித கதியில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி பணிகள்
துரித கதியில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி பணிகளின் மூலம் வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்வாதாரம் துரிதமாக வளர்ச்சியடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
முறையாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் விஸ்தரிப்பு பணிகளும், நிதிசார் நிறுவனங்களின் அங்குரார்ப்பணமும் அப்பகுதிகளை சேர்ந்த மக்களின் அன்றாட நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன.
கிளிநொச்சியை பொறுத்தமட்டில் 9 வங்கிகளும், ஏனைய சில தனியார் நிதிசார் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. கடந்த 18 மாத காலப்பகுதியினுள் கிளிநொச்சி நகர் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது என கப்ரால் மேலும் தெரிவித்திருந்தார்.
பொதுமக்களின் வாழ்வில் நிதி நிறுவனங்களின் மூலம் கிடைக்கப்பெறும் சேவைகள் அவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்துவிடுகிறது. விசேடமாக கடன் வசதிகளின் மூலம் அவர்களின் எதிர்கால திட்டங்களை இலகுவாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.
கொமர்ஷல் லீசிங் நிறுவனத்தின் 50 ஆவது கிளை கிளிநொச்சி நகரில் கடந்து வாரம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உரையாற்றுகையிலேயே மேற்படி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply