கிளிநொச்சி மாவட்டத்‌துக்கு ஜப்பான் 25 மில்லியன் நன்கொடை

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியேறிய மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது

வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் சமூக, பொருளாதார மீள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், கடற்றொழில் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்வதற்கும் ஜப்பான் அரசாங்கம் இந்த நிதியை அன்பளிப்பாக வழங்கவுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியேறிய 370 குடும்பங்கள் இத்திட்டத்தினால் பயனடைய உள்ளனர்.1989ம் ஆண்டு முதல் இவ்வாறான 226 செயற்திட்டங்களுக்காக 3400 மில்லியன் ரூபா வரை நன்கொடையாக ஜப்பான அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பான் தூதுவர் நொபிட்டோ ஹோபே மற்றும் சேவா லங்கா அமைப் பின் தலைவர் கலாநிதி ஹர்ச நவரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply