சம்பளத்தை 45 வீதத்தால் அதிகரிக்கும் வரை போராடுவோம்

கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகாரசபை ஊழியர்களின் சம்பளத்தை 45 வீதத்தால் அதிகரிக்கும் வரை போராடவுள்ளதாக தேசிய ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன, ஊழியர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பாக 45 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பள உயர்வு கிடைக்கும் வரை மிகவும் பொறுமையாகவும், அவதானத்துடனும் பேராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப்போவதாக அவர் கூறியுள்ளார்.

தேசிய ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply