வெளிநாடுகளிலுள்ள இலங்கை டொக்டர்களை அழைக்க விசேட திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை டொக்டர்களின் சேவையை மீண்டும் நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளவென விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு இலங்கை மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இலங்கை டொக்டர்கள் அதிகளவில் பணி புரியும் நாடுகளில் இலங்கை மருத்துவர் சங்கத்தின் கிளைகள் அமைக்கப்படும் என்று சங்கத்தின் செயலாளர் டொக்டர் லசந்த மலவிகே நேற்று தெரிவித்தார்.

இக்கிளைகளின் ஊடாக இலங்கை டொக்டர்களை ஒன்றுபடுத்தி அவர்களின் சேவை இலங்கைக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அதனைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் தாயகத்தை விட்டு வெளியேறிய டொக்டர்களில் பெரும் பகுதியினர் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே பெருமளவில் சேவையாற்றுவது தெரிந்ததே.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply