நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்
எத்தகைய தடைகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் மக்களுக்கான அபிவிருத்தியை ஒருபோதும் பின்போடப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியாது. 30 வருட பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண்பது கடினம் எனினும் முறைப்படி அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுப்பது முறையற்றது எனவும் தெரிவித்த ஜனாதிபதி காணிகளற்றோருக்கு காணிகள் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புத்தள நகரில் பல அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின்னர் மொனராகலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தெரணாபிஷேக’ விழாவில் கலந்துகொண்டு பத்தாயிரம் குடும்பங்களுக்கு ‘ரன்பிம’ திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கினார்.
அமைச்சர்கள் ஜகத் புஷ்பகுமார, ஏ. எல். எம். அதாவுல்லா, சுமேதா ஜயசேன, லக்ஷ்மன் செனவிரத்ன, பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, மாகாண முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
2005 ஆம் ஆண்டிலிருந்து தாய்நாட்டை மீட்டு பாதுகாப்பதற்காக நாம் பாரிய செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
பயங்கரவாதிகள் நாட்டை துண்டாடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது அதனைத் தடுக்க நாம் மேற்கொண்ட நடவடிக்கை களுக்குப் பாரிய தடைகளும் எதிர்ப்புகளும் அழுத்தங்களும் வந்தன. நாம் அத்தனைக்கும் முகங்கொடுத்தே நாட்டை மீட்டெடுத்தோம்.
நாம் நாட்டை மீட்டு பாதுகாத்தபோதும் மக்களின் நாளாந்த தேவைகளை நிறை வேற்றுவது முக்கியமானதாக அமைந்தது. அதனால் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம், பாதைகள் போன்ற பொதுவசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினோம்.
முழு உலகிலும் உணவு நெருக்கடி ஏற்பட்டபோதும் சர்வதேச நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்த போதும் வங்கிகள் வீழ்ச்சியுற்று பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட போதும், வேலையில்லா திண்டாட்டங்களை அதிகரித்தபோதும் நாம் உரிய செயற்திட்டங்கள் மூலம் எமது நாட்டில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அமெரிக்கா போன்ற நாடுகள் ஊழியர்களை வேலைநீக்கம் செய்த காலத்தில் நாம் 6 இலட்சமாக இருந்த அரச ஊழியர் தொகையை 13 இலட்சமாக அதிகரித்தோம். அதுமட்டுமன்றி 20 ஆம் திகதி ஆகும் போது அவர்களுக்கு சம்பளத்தையும் பின்னர் சம்பள முற்பணத்தையும் வழங்கிவருகிறோம். இதற்குப் பாரிய நிதி அவசியமாகிறது.
நாட்டைச் சுதந்திரமாக்கியதாலேயே இவற்றைச் சரிவர மேற்கொள்ள முடிந்தது. தொடர்ந்து விவசாயிகளுக்கான நீர், உரமானியம் என சகல சலுகைகளையும் வழங்கி வருகிறோம். உர விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்ட போதும் நாம் இன்றும் அதே மானிய விலையில் உரம் வழங்கி வருகிறோம்.
நாட்டின் நகர்ப்புறங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த ‘காபட்’ பாதைகள் ‘கொங்ரீட்’ பாதைகளை கிராமங்கள் தோறும் கொண்டு சென்றது எமது அரசாங்கமே. இம்முறை சகல தேர்தல் தொகுதிகளிலும் 25 கிலோ மீற்றர் ‘காபட்’ பாதை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டை மீட்டு மக்களை பயம் சந்தேகமின்றி வாழ வைக்கும் பொறுப்புடன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி சகல தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் கடப்பாடும் எமக்கு உள்ளது.
இக்காலத்தில் எமக்கெதிராக பல சேறு பூசல்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் அதற்குப் பயந்து நாம் எமது தாய்நாட்டை முன்னேற்றுவதிலிருந்து விலகப்போவதில்லை. முதலில் எமது து¡ய்நாடு. அதன்பின்னரே ஏனையவை.
நாட்டின் அபிவிருத்தியை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். அதேவேளை கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் அபிவிருத்தியை முன்னெடுப்பதிலும் நாம் திட்டங்களைச் செயற்படுத்துவோம்.
நாட்டில் தற்போது பாரிய முன்னேற்றத்தைக்காண முடிகிறது. நாட்டில் உள்ள சனத்தொகையை விட தொலைபேசிகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. யுத்தம் முடிவுற்ற குறுகிய காலத்திலேயே நாடு பாரிய முன்னேற்றம் கண்டு வருகிறது.
நாம் இன்று புத்தள பகுதிக்குச் சென்று பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தோம். புத்தள நகரம் ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி நடத்தப்பட்ட பிரதேசமாகும். அதேபோன்று இம்முறை அநுராதபுரத்திலும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியையொட்டியதாக பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் ஷி}&யினிl8t@pனி வருகின்றன.
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்கவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்கவும் யோசனைகளை முன்வைத்தேன். அத்துடன் இளைஞர் யுவதிகள் ஆங்கில மொழியைக் கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். அது நடைமுறைப்பட்டிருந்தால் இன்றுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.
நாம் தற்போது அதனை ஆரம்பித்துள்ளோம். புதிய தொழில்நுட்பத்தை சகல துறைகளிலும் உபயோகப்படுத்த முனைந்துள்ளோம். இந்த முன்னேற்றகரமான செயற்திட்டங்களுடனேயே நாம் எதிர்காலத்திற்குப் பயணிக்கின்றோம். கிராமங்கள் பற்றியும் நாட்டு மக்கள் பற்றியும் தெளிவில்லாதவர்கள் இவற்றை எரிச்சலுடன் நோக்குகின்றனர். தாய்நாட்டை டொலர்களுக்காக காட்டிக் கொடுப்பவர்களுக்கு இத்தகைய முன்னேற்றங்களில் விருப்பமில்லை.
மக்களுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிப்பதும் காணி உறுதிகளை வழங்குவதும் அவர்களுக்கு விருப்பமில்லை. அனைத்தையும் தமது உரிமையாக்கிக் கொள்வதே அவர்களின் நோக்கம்.
இத்தகையோரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே நாம் முன் செல்கிறோம். அபிவிருத்தி செயற்திட்டங்களை எதற்காகவும் நாம் நிறுத்திவிட முடியாது.
பொய்ப் பிரசாரங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அகப்பட்டு ஏமாறும் மக்கள் இப்போது நாட்டில் இல்லை. இன மத, குல பேதமின்றி நாம் செயற்படுகின்றோம். அதாவுல்லா எம்மோடு உள்ளார். அவர் தமது பிரதேசத்துக்கு மட்டும் சேவை செய்பவரல்ல. முழு நாட்டிற்கும் சேவை செய்பவர். அமைச்சர்கள் ஒரு தொகுதிக்கு மட்டும் சேவை செய்பவர்களல்ல.
நாட்டு மக்களாகிய நீங்கள் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளது போல் நாமும் மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எமது பொறுப்பு.
மக்கள் சகல தேவைகளையும் பெற்றுக் கொண்டு சிறந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply