ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அரசியல் தீர்வு குறித்து முக்கிய உரை
மாசி மாதம் 6ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர தினத்தை ஒட்டிய சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரை ஒன்றினை ஆற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் காலை சாவகச்சேரி செல்லும் அவர் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கான விடுதிக் கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் அவர் குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாசி 4ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறும் சுகந்திரதின நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மாசி 6ம் திகதி யாழ்ப்பாணத்தில் சுகந்திர தினத்தை ஒட்டிய நிகழும் சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வார். அன்றைய தினம் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றினை நிகழ்த்தக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட அமைச்சர்கள் சிலரும் யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply