முன்னாள் போராளிகளும் பொலிஸ் சேவையில் இணையலாம்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போரளிகள் தகமைகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கல்வி மற்றும் ஏனைய தகைமைகளுடன் நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் இல்லாதிருந்தால் அவர்கள் பொலிஸ் சேவையில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் சமூகத்துடன் இணந்துள்ளதால் அவர்களை புறக்கணித்து ஒதுக்கிவைத்துவிட முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த 11 ஆயிரம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் 10 ஆயிரம் பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply