அரசியல் தீர்வுப் பேச்சுகளில் சர்வதேச அனுசரணை அவசியம்
இலங்கை அரசாங்கத்துக்கும் தனக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அனுசரணையை தான் வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தேற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி உதவி ராஜாங்கச் செயலாளரான கலாநிதி அலிஸா அய்ரெஸை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர், இவ்விடயத்தில் அமெரிக்கா அனுசரணையாளர் பாத்திரமொன்றை வகிக்க வேண்டுமென கோரினர்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது, இத்தகைய சர்வதேச அனுசரணை சாத்தியமானால் அதை தமது கட்சி வரவேற்கும் என்றார். இத்தகைய பாத்திரத்தை வகிப்பது ஐ.நா.வாகவோ, பொதுநலவாய சம்மேளனமாகவோ சார்க் அமைப்பாகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமாகவோ இருக்கலாம் என அவர் கூறினார்.
‘இதில் விருப்பத்திற்குரிய தெரிவு எதுவும் இல்லை. எனினும் அரசாங்கம் தயாரானால் வெளிநாட்டு அனுசரணையாளர் இருப்பதை நாம் விரும்புகிறோம்’ என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். எனினும் இத்தகைய தலையீட்டுக்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை விடுக்கவில்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply