சீனாவின் கடன்களில் தங்கியிருப்பது இலங்கைக்கு ஆபத்து
இலங்கையின் கட்டுமான வேலைத்திட்டங்கள் நேரடி வெளிநாட்டு உள்நாட்டு முதலீடுகள் இன்றி முற்றுமுழுதாக சீனாவின் கடன்களிலேயே தங்கியிருக்கின்றமை நாட்டின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதகமாக அமைந்துவிடும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டுகின்றது.
பொதுக் கட்டுமான வேலைத்திட்டங்களில் டென்டர் நடைமுறைகளோ வெளிப்படைத் தன்மையோ இன்றி அரசாங்கம் சீனாவின் கடன்களை பெற்றுச் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
மத்தள சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற வேலைத்திட்டங்கள் சீனாவின் முழுமையான கடன்கள் எனவும் அவற்றுக்காக வெளிப்படையான டென்டர் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களின் போது அரசாங்கம், உள்நாட்டு நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களுக்கே டென்டர் நடைமுறையின்றி முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பொதுவாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக கடன் வழங்கும் போது, வெளிப்படையான, டென்டர் நடைமுறைகள் தேவை என்ற நிபந்தனைகளை விதிக்கும் நிலையில், சீனக் கடன்கள் எவ்வித நிபந்தனைகளையும் விதிப்பதில்லை என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிகாட்டினார்.
சீனாவின் கடன்களில் முழுமையாக தங்கியிருப்பது நாட்டின் இறைமைக்கு பெரும் பாதகமாக அமையும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply