நெடியவனை கைது செய்யுமாறு ’இன்ரபோல்’ பிடியாணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பான ‘அனைத்துலக செயலகத்துக்கு’ பொறுப்பாக இருந்த நெடியவன் என்பவரை கைது செய்யுமாறு இலங்கை அரசு சர்வதேச பொலீசாரின் – இன்ரபோலின்- உதவியை நாடியுள்ளது.

இதையடுத்து நெடியவன் என அழைக்கப்படும் சிவபரன் பேரின்பநாயகம் என்பவரை கைது செய்யுமாறு சர்வதேச பொலீஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.

நெடியவன் 1976ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி வட்டுக்கோட்டை பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வயதில் சேர்ந்தவர்.

யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பும் புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதோடு இலங்கை மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவாறு சர்வதேச சமூகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹொலன்ட் நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க பணியாளர்கள் இருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பணச் சேகரிப்பு தொடர்பாக, நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ளும் நோக்குடன் ஹொலன்ட் நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவருடன் ஐந்து அரச தரப்பு வழக்கறிஞர்களும் நோர்வேக்கு வருதை தந்து, நோர்வே பொலிசாரின் உதவியுடன் நெடியவனிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிற்கு 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மேற்குப்பகுதி மாநிலத்தில் வசித்துவரும் நெடியவன் மீதான இவ் விசாரணைகள் ஒஸ்லோவிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இவ்விசாரணைக்கென விடுதலைப் புலிகள் இயக்க அனைத்துலக செயலகத்தின் உதவிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்த நெடியவனைக் கைது செய்வதற்கான ஆணை எதனையும் நோர்வே பொலிசார் விடுக்கவில்லை. ஹொலன்ட் நாட்டு பணியாளர்கள் கொடுத்த தகவல்கள் தொடர்பாக சட்டரீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்குடனேயே ஹொலன்ட் நாட்டு நீதிபதி அரச தரப்பு வழக்கறிஞர்கள் துணையுடன் இவ்விசாரணைகளை மேற்கொள்ள நோர்வே வந்திருந்தார். நெடியவனை விசாரணைக்கு வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டு நீதிமன்ற நடைமுறைப்படி இவ்விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply