இரான் மீதான தடைகள்: அச்சத்தில் இலங்கை
இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் மீது கை வைக்கும் செயல் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 93 வீதமளவு இரானிடமிருந்தே கிடைக்கின்றது.
மற்ற நாடுகளை விட இலங்கையே இரானை முழுமையாக தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது.
அத்துடன் இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரானிடமிருந்து வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கக் கூடிய வசதியே இருப்பதால் தமது நாட்டுக்கு வேறு தெரிவுகளும் குறைவாகத்தான் இருக்கின்றன என்பதும் இலங்கையின் கவலைக்கு காரணம்.
இந்த நிலைமைகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இலங்கையையே கடுமையாக பாதிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கை நீண்டகாலமாகவே இரானுடன் உறவுகளை வளர்த்துவந்துள்ளது. அத்துடன் இலங்கைகு 7 மாத வட்டியில்லாக் கடன் அடிப்படையிலும் இரான் எண்ணெய் விநியோகித்துவருகிறது.
இந்த பின்னணியில், இரானுக்கு எதிரான மேற்குலகின் தடைகளால் எழுந்துள்ள இராஜதந்திர சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இலங்கை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply