மும்மொழி அறிவு இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும்
எங்கள் நாட்டில் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் இன்று தீவிர கவனத்தை செலுத்தி வருகின்றது.
வெறுமனே வாசிக்கவும், படிக்கவும் கற்றுக்கொடுப்பது மாத்திரம் கல்வியல்ல. கல்வியின் உண்மையான பயனை அடைய வேண்டுமானால் மாணவ, மாணவியர் பிற்காலத்தில் தங்களுக்கு ஊன்றுகோலாக இருக் கக்கூடிய கல்வியையே கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி அவர்களின் இந்த இலட்சியக்கனவை நிறைவேற்றும் முகமாக அரசாங்கப் பாடசாலைகளில் கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவியரு க்கு அவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் போது தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு உறுதுணை அளிக்கக்கூடிய பாடவி தானங்களை அறிமுகம் செய்து கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத் தப்படுகிறது.
மனிதவள தேவைகளுக்கு அமைய மாணவர்களை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்காக க.பொ.த. உயர்தர வர்த்தக மற்றும் விஞ்ஞானப் பிரிவை சகல அரசாங்கப் பாடசாலைகளிலும் வலுப்படுத் துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கென முதற்கட்டமாக தெரிவுசெய் யப்பட்டிருக்கும் 1000 பாடசாலைகள் நவீனமயப்படுத்தப்பட விருப்பது டன் வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப் படும் என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
1000 பாடசாலை திட்டத்தின் கீழ் சகல பகுதிகளிலும் சமகாலத்தில் கற்பித் தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இன் றைய நவீன உலகில் நாம் உலகநாடுகளுடன் கல்வித்துறையில் சரிநிக ராக வீற்றிருக்க வேண்டுமாயின் எமது மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவு உயர் மட்டத்தில் இருக்க வேண்டும். இதற்காக ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் கணனி சம்பந் தப்பட்ட தகவல் தொடர்பு கல்வியை கற்பிப்பதற்கான விசேட பிரிவு களை ஏற்படுத்துவதற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தபட்சம் 10 கணனிகளாவது இருக்கும் கணனிப்பாட வகுப்பறைகளை ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஜனாதி பதி தனது பணிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட 30ஆண்டுகால பயங்கரவாத யுத்தம் காரணமாக இனங்களிடையே, சமூகங்களிடையே இருந்துவந்த பகைமை, சந்தேக உணர்வு, நம்பிக்கையின்மை இவை அனைத்திற்கும் 1956ம் ஆண்டு முதல் அமுலாக்கப்பட்ட சிங்கள மட்டும் சட்டமே அடித்தளமாக அமை ந்திருந்ததை நன்கு உணர்ந்திருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மொழிப்பிரச்சினைக்கு சமூக தீர்வு கண்டால் இந்நாட்டு மக்களிடையே உண்மையான சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடி யும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
தமது இந்த நம்பிக்கையை நிறைவேற்றும் முகமாக ஜனாதிபதி அவர்கள் நாடெங்கிலும் மும்மொழித்திட்டத்தை அறிமுகம் செய்யும் செயற்பாட் டில் இப்போது இறங்கியுள்ளார். தனது நெருங்கிய நண்பரான சிரேஷ்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் இதனை நிறைவேற்றும் பொறு ப்பை ஒப்படைத்திருக்கும் ஜனாதிபதி, சிங்களவர்கள் தமிழ் மொழியை யும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இவ்விரு மொழிகளுடன் சர்வதேச மொழியான ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1950ம் ஆண்டு தசாப்தத்தின் பின்னர் இலங்கை மக்கள் மனதில் வேரூன்றி யிருந்த ஆங்கில மொழி மீதான மோகம் படிப்படியாக தளர்ச்சியடைய ஆரம்பித்தது. இதனால், சர்வதேச அரங்கில் இலங்கையின் பல்கலைக் கழக பட்டதாரிகளுக்கு இருந்த வரவேற்பும், மதிப்பும் குறைய ஆரம் பித்தது.
1960ம் ஆண்டு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையில் விஞ்ஞான, வைத்திய, சட்டத்துறை மற்றும் கணக்கியல் துறை பட்டதாரிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி இலகுவில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்தேச நிறுவனங்களில் உயர்பதவிகள் காத்திருந்தன. ஆனால், இன்று இலங்கை பெற்றிருந்த இந்த வாய்ப்பை இந்தியர்களும், பாகிஸ் தானியர்களும், மலேசிய தேசத்தைச் சேர்ந்தவர்களும் எங்களிடமிருந்து அபகரித்துக் கொண்டு விட்டார்கள். இதனால் நாம் அந்த நாடுகள் மீது குறை சொல்ல முடியாது. நம் நாட்டவர்கள் ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சுதேச மொழிகளிலேயே பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை பெற்றுக் கொடுத்ததே இதற்கான காரணம் என்று கல்வி மான்கள் கூறுகிறார்கள்.
இலங்கையை மீண்டும் கல்வித்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மற்றெல்லாத்துறைகளிலும் ஆசிய நாடுகளைவிட முன்னிலைக்கு கொண்டு வர வேண்டுமாயின் நம்நாட்டு மக்களிடையே இன ஐக்கியத் தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தங்களை தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என்று அறிமுகம் செய்வத ற்கு பதில் நாம் ஒவ்வொருவரும் எங்களை இலங்கையர் என்று அறி முகம் செய்து கொள்ளக்கூடிய தேசப்பற்றை பிரதிபலிக்கக்கூடிய மனப் பக்குவம் அவசியமாகும்.
இவ்விதம் நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனோ நிலையில் செயற் பட்டால் இந்த நாட்டை எந்தவொரு சக்தியாலும் பிளவுபடுத்தவோ, சீர் குலைக்கவோ முடியாது. இது பற்றி எங்கள் பிரதம மந்திரி டி.எம். ஜயர ட்ன அவர்கள் பொதுமக்களுக்கு வலுவையும், சக்தியையும் பெற்றுக் கொடுப்பதே ஒரு அரசாங்கத்தின் கடமை என்று தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல மொழி அறிவை நாம் பெற்றுக் கொடுத்தால் அவர்களின் புரிந்துணர்வு அதிகரிக்குமென்றும் அதன் மூலம் அவர்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நற்பணிகளை செய்வார்கள் என்றும் கூறினார்.
மும்மொழி அறிவை மையமாகக் கொண்டு நாம் அனைவரும் தேசப்பற்றுடன் செயற்பட்டால் எமது நாடு சகல துறையிலும் முன்னிலைக்கு வரும் என்று நாம் அசையாத நம்பிக்கை கொள்ள முடியும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply