கிழக்காசியக் கடலில் அமெரிக்க கடற்படையை நிறுத்த இந்தியா ஆதரவு
“கிழக்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையை நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது” என அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் கருத்து கூறியுள்ளார்.
அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர். இவர் அமெரிக்க மேலவை புலனாய்வுக் குழு கூட்டத்தில் பேசும்போது,
“இந்தியா மற்றும் சீனா இடையே இருதரப்பு உறவிலும் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, அருணாச்சல மாநிலத்தின் சீனாவுடனான எல்லை பிரச்னை, காஷ்மீரிலிருந்து சீனா செல்வதற்குத் தனி விசா, இந்திய ராணுவ அதிகாரிக்கு விசா மறுப்பு என இந்தியா சீனா இடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
இதனால் இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது போர் பதற்றம் ஏற்படுகிறது. போர் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு வசதியாக, இந்தியா தனது ஆயுத பலத்தை அதிகரித்தும் வருகிறது. எனினும் இவ்விரு நாடுகளிடையே உடனடியாக போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு ஆசிய நாடுகளும் தங்களிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கிழக்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையை நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply