மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு தலைவருக்கு நீதிமன்று உத்தரவு

நீதிமன்ற உத்தரவினை மீறிய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட இருவரை பிரத்தியேகமாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்குமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 9ஆம் திகதி வடமத்திய மாகாணத்திற்கான சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரத்தியேகமாக ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷாங்க பந்துல கருணாரத்ன உத்தரவிட்டார்.

வட மத்திய மாகாண வரித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு அரசியல் தலையீட்டினால் தகுதியற்ற உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மனுவொன்று இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply