முஸ்லிம்களுக்கு தனியான ஓரு நிர்வாக அலகு வேண்டும்
3 பிளஸ் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்தும் போது கிழக்கு முஸ்லிம்களுக்கும் தனியான ஓர் நிர்வாக அலகு வழங்கப்படவேண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ரி.எம். ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய தென் கிழக்கு மாகாண சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
அதன் அதிகாரத்தை முஸ்லிம் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
13 ஆம் திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்துவதனை சிறி லங்காமுஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதாகவும் அதிலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் மூலம் ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply