’ஜனாதிபதியின் தலையீடு’ நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும்

இலங்கையின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் என் சில்வா தொடர்பாக விசாரணை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரிய ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்குப் பதிலாக இலங்கையின் தலைமை நீதிபதியிடம் அந்தக் கோரிக்கையை விடுத்திருக்கவேண்டுமென உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சரத் என் சில்வா குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்படவுள்ள குழுவொன்றின் தலைவராகப் பதவி வகிக்குமாறு இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நீதிபதி விக்னேஸ்வரனை இம்மாதம் 11 ஆந் திகதியிட்ட கடிதம் ஒன்றின் மூலம் கேட்டிருந்தார். அந்தக் குழுவின் உறுப்பினர்களாக பணிபுரியுமாறு நீதிபதி விக்கினராஜாவையும், உள்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் திசாநாயக்கவையும் அவர் கோரியிருந்தார்.

நீதித்துறை தொடர்புபட்ட அந்த விடயத்தில், நீதிச்சேவைகள் ஆணைக்குழு, அல்லது உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்கவேண்டுமெனவும், நீதித்துறையின் உயர் மட்டங்களைப் புறக்கணித்து, ஜனாதிபதி அந்த முடிவை எடுப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்குமெனவும் கூறி அந்தப் பொறுப்புக்களை வகிக்க முடியாதென நீதிபதிகள் விக்னேஸ்வரனும், விக்னராஜாவும் அறிவித்துள்ளார்கள்.

நீதிபதிகள் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முறையிடலாமென விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply