புலிகள் பல்கலைக்கழகம் அமைக்க இருந்த காணியில் விவசாய பீடம்

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் ஸ்தாபிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது. கிளிநொச்சி பிரதேசத்தில் இதற்காக சுமார் 300 ஏக்கர் காணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள காணி முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே தனியான பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு உத்தேசித்திருந்த பிரதேசத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் தற்போது மருத்துவ பீடத்திற்கு சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. இதன் காரணமாக விவசாய பீடத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய பீடத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சு, யாழ்.பல்கலைக்கழகம் ஆகியன இணங்கியுள்ளதாக பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply