யாழில் காணாமற்போன இருவர் தொடர்பான வழக்கு பரிசீலனை
மக்கள் பேராட்ட இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் காணாமற்போனமை தொடர்பாக மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளின் பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆட்கொணர்வு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யாழ் இராணுவ கட்டளைத் தளபதி, இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
காணாமல் போன இருவரும் பொலிஸாரின் பொறுப்பில் இருப்பதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதாக மனுதாரர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்தக் கூற்றை பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார்வீரராஜ் ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply