தமிழக அரசுடன் உறவுகளை முறித்துக் கொள்வது புத்தி சாதூரியமானதல்ல

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுப்பதற்கு இந்தியாவுடனான உறவு மிகவும் இலங்கைக்கு மிக அவசியமானது. தமிழக அரசாங்கத்துடனான உறவுகளை இலங்கை அரசு முறித்துக் கொள்வது புத்தி சாதூரியமான தீர்மானமாக கருத முடியாது.

மேற்குலக நாடுகளுடனான உறவுகளை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்கக் கூடிய ஆற்றல் தமிழக அரசாங்கத்திடம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அமையக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply