உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு
வவுனியா மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழங்கள் மற்றும் கற்கை நெறிகளை தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கொன்றினை வவுனியா மாவட்ட கல்வி சமூக அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
நாளை செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. இவ் வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பாக சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
இன்று பல்கலைக்கழகங்களில் பல்வேறுபட்ட கற்கைநெறிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் சரியான வழிகாட்டல் இன்மையினால் சில கற்கை நெறிகளை தெரிவு செய்வது மாத்திரமின்றி தமக்கு பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாகவும் உணர்கின்றனர். ஆனால் மறைமுகமாக காணப்படும் கற்கைநெறிகள் மற்றும் வேறு பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகள் தொடர்பில் அவர்கள் அறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் வந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டலை வழங்க வேண்டிய தேவையுள்ளது. எனவே பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார்ந்த விற்பனர்களை கொண்டு வழிகாட்டல் கருத்தரங்கினை நடத்த தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களை மாணவர்களும் பயன்படுத்தி அதிகமானவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதை அதிகரித்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply