சிறிரொலோவின் தலைவராக கஜேந்திரனும் செயலாளராக உதயனும் தெரிவு; மாவட்ட செயலாளர்களும் தலைமைக்குழுவும் நியமனம்.

சிறிரொலோ கட்சியின் தலைவராக காத்தலிங்கம் கஜேந்திரனும் (சேனாதி), செயலாளர் நாயகமாக பரராஜசிங்கம் உதயராசாவும் (உதயன்), பொருளாளராக மகேந்திரனும் (சங்கர்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறிரெலோ கட்சியின் மத்திய குழு, தலைமைக்குழு உட்பட்ட வருடாந்த கூட்டம் நேற்று வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள கட்சியின் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இங்கு தலைமைக்குழு உறுப்பினர்களும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைமைக்குழு உறுப்பினர்களாக சத்தியகாந்தன், இந்திரதாஸ், நகுலேஸ்வரராசா, நிர்மலன், ரகுபதி, இந்திரஜித், ஜெயானந்தன், திருமதி லோஜினி இந்திரஜித், தங்கராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். கட்சியின் அரசியல் தலைவரா க. நகுலேஸ்வரராசா தெரிவானார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக நிர்மலனும், வவுனியா மாவட்ட செயலாளராக இந்திரதாஸும் மன்னார் மாவட்ட செயலாளரா ஜெயக்குமாரும் , யாழ். மாவட்ட செயலாளராக செந்தூரனும் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக சுதனும் திருமலை மாவட்ட செயலாளராக ராம்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய சிறிரெலோவின் செயலாளர் ப. உதயராசா ஜனநாயகக் கொள்கைகளுக்கு அமைய தொலைநோக்கோடு எமது அரசியல் பாதையினை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply