சட்டவிரோத வியாபாரிகளுக்கு இறுதிக் காலக்கெடு

மன்னார் நகரிலுள்ள வாராந்த சந்தைத் தொகுதியை ஆக்கிரமித்திருக்கும் சட்ட விரோத வியாபாரிகள் அங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு மன்னார் நகர சபையால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்தை இரு தசாப்தங்களுக்கு முன்னர் ‘பொல’ என்றழைக்கப்படும் வாரச் சந்தையாக இருந்தது. போர்க்காலங்களில் சந்தைத் தொகுதியை ஆக்கிரமித்த சில வியாபாரிகள் தினந்தோறும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

மன்னார் நகர சபைக்கு மக்கள் உறுப்பினர்கள் தெரிவு செய்ய ப்பட்டதைத் தொடர்ந்து சந்தைத் தொகுதி யை மேம்படுத்தும் திட்டங்கள் முன் னெடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகச் சந்தையை ஆக்கிரமித்திருப்பவர் களை அகற்றி மீண்டும் வாரச்சந்தையாக அதனை மாற்ற சபை முடிவெடுத்தது.

வாரச் சந்தையாக இருக்கும் போது தெற்கு வடக்கு என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கூடி வியாபாரம் செய்யக் கூடியதாகவிருக்கும் இதனைக் கருத்திற் கொண்டு சந்தைத் தொகுதி களை ஆக்கிரமித்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நகரபை அவர்களுக்கு அறிவித்திருந்தது, எனினும் அவர்கள் வெளியேறவில்லை. இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பல கால அவகாசங்களை அவர்கள் கணக்கெடுக்கத் தவறியதால் தற்போது இறுதிக்காலக்கெடு வழங்கப்பட்டிருப்பதாக சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

சந்தையை ஆக்கிரமித்திருப்பவர்களால் எற்படும் பிரச்சனைகள் குறித்து மன்னார் வர்த்தகர்களுக்கும் நகரசபைக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றதாகவும் அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் சந்தையை விட்டு வெளியேற எதிர்வரும் 16 ம் திகதி வரை இறுதிக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ள தாகவும் இம்முறையும் அவர்கள் வெளியேறாதுபோனால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபைத் தலைவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply