மாலைத்தீவு ஜனாதிபதி பதவி விலகினார்
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தனது பதவியிலிருந்து திடீர் இராஜினாமா செய்துள்ளதாக மாலைத்தீவு இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளுடன் இணைந்து சில பொலிஸாரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாலைத்தீவு ஜனாதிபதி இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பதவி விலகி அந்த இடத்திற்கு தற்போதை துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் என்பவரை நியமிக்க மாலைத்தீவு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மாலைத்தீவு இராணுவ பிரிகேடியர் அஹமட் சியாம் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவின் மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்துமாறு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மொஹமட் நசீட் விடுத்த உத்தரவை அடுத்தே அங்கு எதிர்கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாலைதீவு அரசாங்க வானொலியை அந்த நாட்டின் பொலிஸ்துறை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புச் சேவைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்.
தான் பதவி விலகி அந்த இடத்திற்கு தற்போதை துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் என்பவரை நியமிக்க மாலைதீவு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மாலைத்தீவு இராணுவ பிரிகேடியர் அஹமட் சியாம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply