வடபகுதியிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்

வடபகுதியிலிருற்து உடனடியாக இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டுமென நாம் இலங்கையர்அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் யாழ்.மாவட்டத்தில் ஆறு படுகொலைச்சம்பவங்களும், இரண்டு தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அதிகளவில் இராணுவஆட்சி காணப்பட்ட நிலையிலும் வடக்கில் மிக மோசமான குற்றச் செயல்கள்இடம்பெற்று வருவதகாக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகளவு இராணுவத்தினர் வடக்கில் குவிக்கப்பட்டுள்ளமை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்படியுள்ளதாகவும் எனவே, வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தினரின் பங்களிப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும்,அபிவிருத்தியையும் உறுதி செய்யும் என அரசு கூறி வருகின்ற போதிலும்,இராணுவத்தினரின் பிரசன்னம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply