ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற சமஸ்கிருதத்தை நாடும் கல்வி நிறுவனம்
நியூசிலாந்தில் உள்ள ஒரு பாடசாலை யில் சிறுவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு, சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுகிறது.
ஆக்லாந்து நகரில் உள்ள இப்பாடசாலை ‘Values-based academic institution’ (கலாசார மதிப்புக்கள் சார்ந்த கல்வி நிறுவனம்) என அழைக்கப்படுகிறது. இங்கு 1 ஆம் வகுப்பிலிருந்து – 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுகின்றது.
இம்மொழி, மாணவர்கள் வேறு எந்த மொழியை கற்றுக்கொள்வதற்கும் ஒரு மிகச் சிறந்த அடித்தளத்தை உருவாக்கி கொடுத்து விடுவதாக அக்கல்வி நிறுவனம் தனது அனுபவத்தை விவரிக்கிறது.
இலத்தின், கிரேக், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள சமஸ்கிருத மொழி ஒரு மிகச் சிறந்த இலக்கண (Grammer) கட்டமைப்பை கொண்டுள்ளது.
ஆங்கில மொழியை இலகுவாக புரிந்துகொள்வதற்கான திசைகாட்டியாக செயற்படுகிறது. மொழியின் கட்டமைப்பை தெளிவாக புரிந்து கொள்வதற்கு மாத்திரம் என்றல்ல, மொழி உச்சரிப்பு, உரை நடைசொற்களை தெளிவாக புரிந்துகொண்டு விளக்குதல் என்பவற்றிற்கும் சமஸ்கிருத மொழி பாரிய பங்களிப் செலுத்துவதாக குறித்த பாடசாலையின் நிறுவனர் பீட்டர் குரோம்ப்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் Universa Society of Hinduism அமைப்பின் தலைவர் செட் (Zed) இது பற்றி கருத்து தெரிவிக்கையில், சமஸ்கிருத மொழிக்கு மீண்டும் அதற்குரிய அங்கீகாரத்தை சமூகத்தில் வழங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இம்மொழியை விருத்தி செய்வதற்கு இந்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது.
இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை மட்டுமல்ல, பண்டைய விஞ்ஞான கோட்பாடு அடித்தளங்களை பாதுகாக்கவும் சமஸ்கிருதம் தேவையாக உள்ளது. இந்துக்களின் கோட்பாடுகள் மாத்திரமல்ல, பெளத்த, ஜென் மத கோட்பாடுகள் பலவும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. கடவுளின் மொழி என இதை அழைக்கிறார்கள்.
கடவுளால் உருவாக்கப்பட்ட அல்லது, தானாக அவதரித்து கொண்ட இம்மொழியில் நித்திய மற்றும் தெய்வீகம் உள்ளது. மனித குலத்தின் பழைமையான நூல்களான பல, சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு ரிக் வேதத்தை கூறலாம். இம்மொழியின் அவசியம் அறியப்பட வேண்டிய தேவையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றார்.
‘சமஸ்கிருத மொழி பயிலாமல், ஒருவன் உண்மையான கற்கை மனிதனாகமாட்டான்’ என்கிறார் மகாத்மா காந்தி. ‘உலக மொழிகளில் மிகச் சிறந்தது சமஸ்கிருதம்’ என்கிறார் ஜேர்மன் தத்துவவியலாளர் மேக்ஸ் முல்லெர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply