புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சிதறடியுங்கள்
புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் சிறிலங்கா கார்டியன் எனப்படும் இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கும் நாடுகடந்த அரசாங்கத்தை இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க வழிப்படுத்தும் வேலைகளில் அதனை நிறுவிய கேபி ஈடுபட்டு வருவதாகவும் சிறிலங்கா கார்டியன் இணையம் மேலும் தெரிவித்துள்ளது.
உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடு கடந்த அரசாங்கத்தை கேபியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒஸ்லோவில் உள்ள சர்வே, பாரிஸில் உள்ள மனோ ஆகிய இரு நபர்கள் வழிநடத்தி வருகின்றார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply