சவேந்திர சில்வா மீதான வழக்கு நியூயோர்க் நீதிமன்றால் நிராகரிப்பு
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சவேந்திர சில்வா குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் இருவரால் தொடரப்பட்ட வழக்கில் இலங்கை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தென் ஆபிரிக்காவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுள்ள தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் வத்சலாதேவி மற்றும் கே. சீதாராம் ஆகிய இரண்டு பெண் புலி உறுப்பினர்களும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளனர் என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தொலைபேசி மூலம் நியூயோர்க்கிலிருந்து தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகர நீதிமன்ற நீதவான் ஜே. போல் டங்கன் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில் தங்களது கணவன்மார் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக இவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இராஜதந்திர மட்டத்தில் கடமையிலீடு பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்களுக்கு எதிராக இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயம் எனக் குறிப்பிட்ட நீதவான் அமெரிக்காவின் யூ. எஸ். சீ. 22 சட்டத்தின் பிரகாரம் இதன்பின்னர் சவேந்திர சில்வா போன்ற அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வழக்கு தொடர்ந்த இரண்டு பெண்களும் புலிகள் அமைப்புக்கு நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்பதுடன் கோடிக்கணக்கான பணத்தை புலிகளுக்கு வழங்கியிருந்தமையும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஐ. நா. வின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வா கூறுகையில் :-
புலம்பெயர் தமிழர்கள் சிலர் தமிழ் டயஸ்போரா வெவ்வேறு வழிகளில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று கூறினார்.
சர்வதேச மட்டத்தில் இவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை. என்றும் தொடர்ந்தும் சூழ்ச்சிகளை முறியடிக்க தாம் ஆயத்தமாக இருப்பதாகவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply