ரணில் – சம்பந்தன் சந்திப்பு
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளில் ஐ.தே.க. சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, மங்கள சமரவீர ஆகியோர் பங்குபற்றினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஆர்.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றினர்.
அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் அடிப்படை அம்சமொன்றை கொண்டிருப்பது சிறந்தது எனவும் இல்லாவிட்டால் இப்பேச்சுவார்த்தை மிக நீண்ட பயணமாக அமைந்துவிடும் எனவும் ஐ.தே.க. வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க – த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக 13ஆவது திருத்தச்சட்டத்தை அர்த்தபூர்வமாக அமல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்குவது நல்லது எனவும் ஐ.தே.க. கூறியுள்ளது.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கடினமான தீர்வை எதிர்பார்க்கவில்லை எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், யதார்த்தமான, நிலைத்துநிற்கக் கூடிய தீர்வையே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் த.தே.கூட்டமைப்பு இச்சந்திப்பில் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply