வட கிழக்கை மேலும் இராணுவமயப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது

வடக்கு கிழக்கில் மேலும் புதிதாக இராணுவ முகாமக்ளை அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை மேலும் இராணுவமயப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே இருக்கும் இராணுவ முகாம்களுக்கு மேலதிகமாக புதிதாக இராணுவ முகாம்களை அமைப்பது யுத்த வலயத்தில் வாழ்ந்து வரும் மக்களை பெரிதும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தின் புதுமத்தளான் பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம்ஒன்றை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியில் இது தொடர்பில் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என அவர்குறிப்பிட்டுள்ளார். புதிதாக இராணுவ முகாமை அமைப்பதன் மூலம் உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு மேலும் கால தாமதம் ஏற்படக் கூடுமென அவர்தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வடக்கு மக்களின் பூர்வீகக் காணிகளை சுவீகரித்து வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளா

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply