மனித உரிமை திட்டத்துக்கு விசேட உபகுழு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்கள் மாத்திரமல்ல சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராகக் காணப்படும் தவறான புரிந்துணர்வுகளை சீர்செய்து கொள்வதற்குமாக ஆறு அமைச்சர்கள் அடங்கிய விசேட உபகுழுவொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.
இக்குழுவானது தேசியளவில் மனித உரிமை மேம்பாட்டுத் திட்டங்;களை முன்னெடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரும் சுற்றாடல் அமைச்சருமான அநுர பிரியதர்சன் யாப்பா தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அத்துறைசார் பொறுப்புள்ள அமைச்சுகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேசிய நல்லிணக்கத்துக்கான துறைகளில் மாற்றங்களை உணர முடியும்.
மனித உரிமைகள் தொடர்பான தேசிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேலதிகமாக ஆறு பேர் அடங்கிய உபகுழுவொன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ், மஹிந்த சமரசிங்க, அநுரபிரியதர்சன் யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply