விவசாயம் செய்யும் படையினர்; பெருமூச்சு விடும் விவசாயிகள்

வன்னிப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள படையினர் நெல் உற்பத்தி மற்றும் சோளம், பயறு போன்ற சிறு தானியச் செய்கையில் ஆர்வம் காட்டி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. அவற்றைப் பார்த்து வன்னி விவசாயிகள் பெருமூச்சு விடுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வன்னிப் பிரதேசத்தில் பெருமளவான விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கு விவசாய நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு ஏற்றவாறாக வன்னியில் கிடைக்கும் தண்ணிர் வசதியும் அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏக்கர் கணக்கில் நெற் செய்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளதும் அறுவடைக்குத் தயார் நிலையில் அவை உள்ளதும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அவற்றைப் பார்த்து பெருமூச்சு விட்டுச் செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply